ஆடுதுறை இணையப் பயிலரங்கம் தொடங்கி நடைபெறுகின்றது…

வழமையானது


கரு.மலர்ச்செல்வன் இணையம் கற்போம் நூல் வெளியிட அதனைப் பெறுகின்றார் திட்டக்குடித் திரைப்படத்தின் இயக்குநர் சுந்தரன். அருகில் சிங்கப்பூர் இரவிச்சந்திரன், நூலாசிரியர் மு.இளங்கோவன்

பெரம்பலூர் மாவட்டம் சு.ஆடுதுறையில் இன்று(18. 12. 2010) காலை 10.30 மணியளவில் தமிழ் இணையப் பயிலரங்கம் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களைக் கரு.மலர்ச்செல்வன் வரவேற்றார். புதுச்சேரி மு.இளங்கோவன் கலந்துகொண்டு மாணவர்கள்,பொதுமக்களுக்குத் தமிழ் இணையம்,தட்டச்சு, மின்னஞ்சல், விக்கிப்பீடியா வசதிகளை எடுத்துரைத்தார்.
முனைவர் இரத்தின. புகழேந்தியும் கலந்துகொண்டு பயிற்சி வழங்கினார்.
இலண்டனில் உள்ள சிவா பிள்ளையுடன் மாணவர்களும் அறிவகம் நூலகப் பொறுப்பாளர் திருமதி. வாணியும் காணொளி வழியாக உரையாடினர்.

நிகழ்ச்சிக்குச் சிங்கப்பூரிலிருந்து இணைய ஆர்வலர் இரவிச்சந்திரன் அவர்கள் வருகைபுரிந்து வாழ்த்துரை வழங்கினார். திட்டக்குடி திரைப்பட இயக்குநர் சுந்தரன் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். கடலூர் திரைப்பட இயக்கத்தின் செயலாளர் சாமிக் கச்சிராயர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக முனைவர் மு.இளங்கோவன் எழுதிய இணையம் கற்போம் நூல் செம்பதிப்பைக் கரு. மலர்ச்செல்வன் வெளியிடச் சிங்கப்பூர் இரவிச்சந்திரன், திரைப்பட இயக்குநர் சுந்தரன் ஆகியோர் முதலிரு படிகளைப் பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s