நாட்டுப்புறவியல் என்னும் என் நூலின் இரண்டாம் பதிப்பு வெளிவந்துவிட்டது …

வழமையானது


நூல் அட்டை முகப்பு

நாட்டுப்புறவியல் என்னும் தலைப்பில் 2006 ஆம் ஆண்டு நான் எழுதிய நூலின் முதற்பதிப்பு மாணவர்களிடமும் பொது மக்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் காரணமாக அச்சிட்டபடிகள் இரண்டாண்டுக்கு முன்பே விற்றுத்தீர்ந்தன. அன்பர்கள் பலர் வேண்டியும் மீண்டும் அச்சிடமுடியாமல் இருந்தது.

அண்மையில் சிங்கப்பூர்,மலேசியா சென்றபொழுது என் நாட்டுப்புறப் பாடல்களைக் கேட்ட பலரும் இந்த நூலின் தேவையை வலியுறுத்தினர்.பல கல்லூரிகளில் இலக்கியமன்ற விழாக்களில் நாட்டுப்புறப்பாடல்களை நான் பாடி விளக்கியபொழுது பலரும் நூல் வேண்டினர். இணையத்தை இன்று பரப்ப நான் முனைவதுபோல் நாட்டுப்புறப்பாடல் பரப்பும் முயற்சியிலும் தொகுக்கும் முயற்சியிலும் பல்லாண்டுகளாக நான் ஈடுபட்டுவருவது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

நாட்டுப்புறவியல் என்ற பாடம் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாடமாக உள்ளது. மாணவர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் புரியும்படி இந்த நூலை எளிய நடையில் எழுதியிருந்தேன். நாட்டுப்புறவியல் ஆய்வறிஞர் தே.லூர்து உள்ளிட்டவர்கள் இந்த நூலைக் கற்றுப் பாராட்டி எழுதினர்.

இணையத்தில் உள்ள அரிய செய்திகளையும் நாட்டுப்புறவியல் சார்ந்த இணைய தளங்களையும் இந்த நூலில் குறிப்பிட்டு எழுதியுள்ளமை குறிப்பிடத்தகுந்த செய்தியாகும். நூலின் பிற்பகுதியில் அரிய நாட்டுப்புறப்பாடல்கள் பல இணைக்கப்பட்டுள்ளன. என் நூலின் இரண்டாம் பதிப்பு வெளிவந்துவிட்டது …

தேவைப்படுவோர் பின்வரும் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்
muelangovan@gmail.com
செல்பேசி +91 7708273728
அஞ்சல் முகவரி
வயல்வெளிப் பதிப்பகம்,இடைக்கட்டு,உள்கோட்டை(அஞ்சல்)
கங்கைகொண்டசோழபுரம்(வழி)
அரியலூர் மாவட்டம்-612901
தமிழ்நாடு,இந்தியா

விலை 80 உருவா
பக்கம் 160

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s