கன்னடமொழிப் பேராசிரியர் க.மலர்விழி

வழமையானது


பேராசிரியர் க.மலர்விழி

தமிழிலிருந்து உருவான மொழிகளுள் கன்னடமொழியும் ஒன்றாகும்.திராவிடமொழிக் குடும்பத்துள் கன்னடத்துக்கும் முதன்மை இடம் உண்டு.கன்னட மொழியில் புகழ்பெற்ற பல புலவர்கள், எழுத்தாளர்கள் உண்டு.கன்னட மொழி நூல்கள் பல தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதுபோல் தமிழிலிருந்து பல நூல்கள் கன்னடமொழிக்குச் சென்றுள்ளன. அவ்வாறு தமிழிலிருந்து கன்னட மொழிக்குத் தமிழின் தரம் குறையாமல், கன்னடமொழி மரபுச்செழுமையுடன் மொழிபெயர்ப்பவர்களுள் பேராசிரியர் க.மலர்விழி குறிப்பிடத்தகுந்தவர்.

இவர் வேலூர் மவட்டத்தில் பிறந்தவர்(26.11.1964).பெற்றோர் திருவாளர்கள் கமலநாதன், சுசிலா.இளம் அகவை முதல் பெங்களூரில் வாழ்ந்து வருபவர்.பெங்களூரில் தொடக்கக் கல்வியை நிறைவுசெய்து பெங்களூரு மகாராணி கல்லூரியில் இளங்கலைப் பட்டமும்(1985), பெங்களூரு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும்(கன்னடம்)(1987) பெற்றவர்.குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்கின்றார்.இவரின் ஆய்வுத்தலைப்பு: “கன்னடச் சிறுகதையின் தந்தை வேங்கடேச ஐயங்கார்-புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஒப்பாய்வு” என்பதாகும்.பேராசிரியர் கார்லோசு(தமிழவன்)அவர்களின் ஊக்குவிப்பால் கன்னடமொழிபெயர்ப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை ஆசியவியல் நிறுவனத்தில் சிலகாலம்(1988-90) பணிபுரிந்தவர்.
தமிழ்,தெலுங்கு,மலையாளம்,சிங்களம்,ஆங்கில மொழிகளில் பயிற்சியுடையவர்.

தமிழிலிருந்து கன்னடத்துக்குத் தமிழ்க்கவிதைகள், சிறுகதைகள் பலவற்றை மொழிபெயர்த்துள்ளார்.புதுமைப்பித்தன், வைரமுத்து, ம.இராசேந்திரன், இராம.குருநாதன், சூரியகாந்தன்,அ.சங்கரி,சுரேசுகுமார், நந்தசேனா,கா.பா.கலையரசன் ஆகியோரது பல படைப்புகளைக் கன்னடத்துக்கு மொழிபெயர்த்துள்ளார்,வைரமுத்துக் கவிதைகள் கன்னடத்தில் “வைரமுத்து அவர்களின் 33 கவிதைகள்” என்னும் தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டு மிகப்பெரிய விற்பனை கண்டது.ஒன்பதாம் திருமுறையை அண்மையில் கன்னடத்தில் மொழிபெயர்த்துள்ளமை குறிப்பிடத்தகுந்தது.சிலப்பதிகாரத்தைக் கன்னடத்தில் மொழிபெயர்க்க பேராசிரியர் க.மலர்விழி அவர்கள் திட்டமிட்டு வருகின்றார்.

இவர் முகவரி

Prof.K.Malarvizhi,
Department of Kannada Language,
Presidency College,
Kempaura, Hebbala,Bangalore
560 024
hd_malar@yahoo.co.in

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s