கல்விச்செம்மல் முனைவர் வி.முத்து அவர்களின் மொரிசீயசு பயணம்

வழமையானது


கல்விச்செம்மல் வி.முத்து அவர்கள்

புதுச்சேரி வி.முத்து அவர்கள் மொரீசியசு நாட்டுக்குக் கல்விப்பயணமாகச்செல்ல உள்ளார்கள். இவர் கடலூர்த் தமிழ்ச்சங்கத்தின் தலைவரும்,புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் பொருளாளரும், தெள்ளாறு நந்திவர்மன் கலை அறிவியல்கல்லூரி, பாவேந்தர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (புதுச்சேரி),பல்லவன்பொறியியல் கல்லூரி(காஞ்சிபுரம்) உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களின்
நிறுவுநருமான முனைவர் வி.முத்து அவர்கள் மொரிசீயசு நாட்டுக்குக் கல்விப்பயணமாகச் செல்ல உள்ளார்கள்.

அவர்கள் ஏப்ரல் 6 இல் இந்தியாவிலிருந்துபுறப்பட்டுச்சென்று, ஒரு வாரம் தங்க உள்ளார்கள்.
மொரீசியசில் உள்ள தமிழன்பர்கள், தமிழமைப்புகள் பற்றியும் தொடர்புமுகவரி, மின்னஞ்சல் முகவரி,தொலைபேசி எண்கள் எனக்குத் தெரிவித்தால் ஐயாவின் பயணத்துக்கு உதவியாகத் திட்டமிட முடியும்.தமிழன்பர்களைச் சந்திக்க ஐயாமுத்து அவர்கள் விரும்புகிறார்கள்.

வரும் 06.04.2010வருகின்றார்.08.04.2010 வரை அங்கு வேறொரு அமைப்பு சார்பில் நடக்கும் பாராட்டு விழாவில் கலந்துகொள்கின்றார்.

07.04.2010 இல் மொரியசு நாட்டில் மண்ணின் மாமனிதர்(The Great Son Of The Soil Award) விருதினை மொரிசீயசு நாட்டு அதிபர் சர்.அனிருத்த ஜெகநாத் அவர்களின் கையால் பெற உள்ளார்கள்.

அதன் பிறகு 08.04.2010 முதல் 12.04.2010 வரை அவர் பொறுப்பில் மொரீசியசு நாட்டைச் சுற்றிப்பார்க்க விரும்புகிறார். மேலும் தமிழமைப்புகள் சார்பில் நடக்கும் பல்வேறுகூட்டங்களில் கலந்துகொள்கிறார்.தமிழ்ச்செம்மொழி சிறப்பு பற்றியும் தமிழர் வரலாறு, தமிழகத்தில் அயல்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சி பற்றியும் பல்வேறு இடங்களில் உரையாற்றுகின்றார்.

கல்விச்செம்மல் வி.முத்து அவர்களின் கல்விப்பபயணம் வெற்றிபெற வாழ்த்துகிறோம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s